ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது மாநாடு இன்று ஆரம்பம்!!

509

un-human-rights-council

ஜெனீவாவில் ஐ.நா சபை மனித உரிமைப் பேரவையின் 24 வது மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளன.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பேரவையின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் தொடர்பில் விவாதத்துக்கான வருடாந்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்தபோது கண்டறியப்பட்ட சில விடயங்களையே அவர் தனது உரையில் சுட்டிக்காட்டுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் மனித உரிமை, நிலைவரம், ஜனநாயகத்துக்குச் சவாலான விடயங்கள், காணாமல் போனார் நிலைமைகள், தமிழர் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம், சிவில் நிர்வாகச் சிக்கல்கள், தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள், தமிழ் அரசியல் கைதிகளின் தடுத்து வைப்பு, முஸ்லிம்கள் மீதான அண்மைக்கால கெடுபிடிகள், மலையக மக்கள் பிரச்சினை, பள்ளிவாசல்கள் தகர்ப்பு கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் அமுலாக்கலின் தொய்வு நிலைமை, ஊடக, கருத்துச் சுதந்திரங்களின் கேள்விக்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட தன்மை உட்படலான மேலும் சில உப தலைப்புகளின் கீழ் இந்த அறிக்கையைத் தயாரிக்கவுள்ளார் என்றும் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சிலர் நேற்று ஜெனீவா சென்றுள்ளனர்.

இந்த மாநாடு இலங்கைக்கு முக்கியமானது இல்லை எனவும் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையகத்துக்கான இலங்கை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்வார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.