அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் விமானத்தில் தனியாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேயான் கேம்பல் 19, விமானம் மூலம் தனியாக உலகை சுற்றி வர திட்டமிட்டார். இலகுரக விமானத்தில் ஜூன் 30ம் திகதி அவுஸ்திரேலியாவின் நியூ வேல்ஸ் பகுதியில் இருந்து தன், சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து 70 நாட்கள் விமானத்தில் பயணித்த ரேயான் உலகின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்து தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். இதன் மூலம், மிகச் சிறிய வயதில், விமானம் மூலம் உலகை சுற்றி வந்த நபர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவை சேர்ந்த ஜக் வீகன்ட்(21) இந்த சாதனையை படைத்திருந்தார். 19 வயதிலேயே உலகை சுற்றி வந்ததால் ஜக்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் அமெரிக்காவை சேர்ந்த, ஜக் வீகன்ட் 21 வயதில் இந்த சாதனையை படைத்திருந்தார். 19 வயதிலேயே உலகை சுற்றி வந்ததால் ஜக்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.