குடிவெறியில் தகராறு செய்த தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!!

721

murder

குடிவெறியில் தகராறு செய்த தந்தையை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மகனை பொலிசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் பொறையாரை அடுத்த குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குஞ்சான்(65). இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் குஞ்சான் தன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். பொறையார் பொலிசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு அனுப்பினர்.



விசாரணையில் நேற்று முன்தினம் மதியம் குஞ்சான் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவரது மகன் சேகர் (40) உருட்டுக்கட்டையால் அவரை அடித்துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த குஞ்சான் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிய வந்தது. பொலிசார் சேகரை கைது செய்தனர்.