குடும்பம் நடத்த மனைவி மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை!!

533

Man-on-fire

குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததால் மாமனார் வீட்டில் மருமகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பழனி(45). விவசாயி. இவரது மனைவி வள்ளி(39). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டதால் அம்மாப்பேட்டையில் குழந்தைகளை விட்டு விட்டு வள்ளி தன் தாய் வீடான மன்னார்குடி அருகே உள்ள எடையூர், வேப்பஞ்சேரிக்குச் சென்றுவிட்டார்.



நேற்று காலை பழனி வேப்பஞ்சேரிக்குச் சென்று, வள்ளியைக் குடும்பம் நடத்த அழைத்தார். வள்ளி அவருடன் செல்ல மறுத்து ஆபாசமாகத் திட்டியுள்ளார்.

இதனால் அவமானம் அடைந்த பழனி மாமனார் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

அருகில் இருந்தோர் அவரை மீட்டு மன்னார்குடி அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பழனி இறந்தார். எடையூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.