VFS Globalஇன் புதிய விசா விண்ணப்ப நிலையம் நேற்று புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய நிலைத்தை இலங்கைக்கான அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கொழும்பில் நேற்று திறந்து வைத்தார்.
புதிய விசா விண்ணப்ப நிலையம் தற்போது அர்னல்ட் ரத்நாயக்க மாவத்தையில் செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்த அலுவலகம் வாடிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவுக்காக இலகுவாகவும் விரைவாகவும் விசா பெற்றுக் கொள்ள உதவுகின்றது. விசா விண்ணப்ப நிலையம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை திறந்து திறந்திருக்கும்
பிரித்தானியவிற்கான வருகை விசாவுக்கான விண்ணப்பங்களின் அதிகரிப்பு காரணமாக உள்ளூர் பங்குதாரரான VFS Global இந்த புதிய விசா விண்ணப்ப நிலையத்தை திறந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் James Dauris தெரிவித்துள்ளார்.
விசா சேவை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு விரைவான மற்றும் எளிமையான புதிய வருகை விசா விண்ணப்ப படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாடிக்கையாளர்கள் ஒழுங்காக தங்கள் விசா விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் விசா விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






