விண்வெளிக்கு செல்லும் 2ஆவது குரங்கு!!

530

monkey

கடந்த ஜனவரி மாதம் ஈரான் விண்வெளி மையம் தங்களது சொந்த தயாரிப்பான பிஷ்கம்-I ரொக்கெட்டில் குரங்கினை முதன்முறையாக விண்ணிற்கு அனுப்பியது.

தற்போது வரும் 45 நாட்களுக்குள் பிஷ்கம்-II ரொக்கெட் மூலம் மற்றொரு குரங்கை அனுப்பும் திட்டத்தில் இருப்பதாக அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வரும் ஐந்து முதல் எட்டு ஆண்டிற்குள் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டமாக உயிரினங்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.



முதலில் அனுப்பப்பட்ட ரொக்கெட்டானது திட எரிபொருளில் இயங்குவதாக அமைக்கப்பட்டிருந்தது. இப்போது அனுப்பப்பட இருப்பது திரவ எரிபொருளை பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஈரான் விண்வெளி மையத்தின் இயக்குநர் ஹமித் பசெலி தெரிவித்துள்ளார்.

மேலும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் திகதி முடிவடையும் ஈரானிய ஆண்டிற்குள் தொழில்நுட்ப ஆய்விற்கான தட்பிர், ஷரிப், நஹித் ஆகிய விண்கலங்களையும் விண்ணிற்கு செலுத்தும் முயற்சிகளில் ஈரான் விண்வெளி மையம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.