வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று 18.11.2016 வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
விபுலம் சஞ்சிகையின் நான்காவது இதழ் பதினொரு வருடங்களின் பின் வெளியீடு செய்து வைக்கபட்டது. 2000 ஆண்டில் முதன் முதல் வெளிவந்த இந்த விபுலம் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் 2003 இலும் மூன்றாவது இதழ் 2005 இலும் வெளிவந்த நிலையில் நீண்ட கால இடைவெளியின் பின் நான்காவது இதழ் இவ்வருடம் பரிசளிப்பு நிகழ்வின்போது வெளிவந்துள்ளது.
கல்லூரி அதிபரின் ஆலோசனையின் பேரில் இதழாசிரியர் ம.பிரதீபன் நெறியாள்கையில் சு.ரதீஸ்வரன் அவர்களின் அட்டைபடத்துடன் பாடசாலையின் ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோரது ஆக்கங்களை தாங்கி உருவாக்கப்பட்ட சஞ்சிகையினை கல்லூரி அதிபர் சு . அமிர்தலிங்கம் அவர்கள் வெளியீடு செய்து வைத்து சிறப்புபிரதிகளை வழங்கி வைத்தார்.தொடர்ந்து சஞ்சிகையின் விமர்சன உரையை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய இந்து நாகரீக ஆசிரியர் ரமேஷ் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்வுகளுடன் :கஜன்