திருமணம் முக்கியம் அல்ல தந்தைதான் முக்கியம் : ரயில் விபத்தில் சிக்கிய மணமகள்!!

304

daughter

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

ரயில் விபத்துக்குள் சிக்கிய போது பெட்டியில் இருந்தவர்கள் எங்கு மாட்டிக்கொண்டனர் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் உடன் பயணித்த உறவுகளை காண முடியாமல் உயிர் பிழைத்த பயணிகள் தவித்தனர்.

விபத்துக்குள் சிக்கிய ரயிலில் அசாம்காரக் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான ரூபி குப்தாவும் பயணித்துள்ளார். ரூபிக்கு டிசம்பர் 1ம் திகதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு உள்ளது.

திருமணத்திற்காக தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் நால்வருடன் சென்றுள்ளார். விபத்தில் சிக்கிய ரூபியின் கைகளில் காயம் ஏற்பட்டு உள்ளது. அவருடைய சகோதரிகள் அர்சனா, குஷி, சகோதரர்கள் அபிசேக், விசால் ஆகியோரும் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் திருமணத்திற்கு வாங்கிய பொருட்களையும் அவர் இழந்துவிட்டார், தன்னுடைய தந்தை எங்கிருக்கிறார் என்று தேடிவருகிறார். இவ்வாறு கதறிய நிலையில் ரூபி பேசுகையில்,

என்னுடைய தந்தையை நான் இதுவரையில் கண்டுபிடிக்கவில்லை, என்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கூட எனக்கு தெரியாது.

ஆனால் இப்போது திருமணம் எனக்கு முக்கியம் அல்ல. எனக்கு தந்தைதான் முக்கியம்: என்னுடைய தந்தை எனக்கு வேண்டும், நான் எல்லாப் பகுதிக்கும் சென்று அழைத்தேன், ஆனால் அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை, சிலர் மருத்துவமனைகளில் தேடும்படி கூறுகிறார்கள், எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று ரூபி கூறியுள்ளார்.