வவுனியா வடக்கில் காட்டு யானைகள் அட்டகாசம்!!

818

 
வவுனியா நெடுங்கேணி பகுதியில் நேற்று (20.11.2016) இரவு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த இரண்டு ஏக்கர் பப்பாசி மரங்களுக்கு சேதம் விளைவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

நேற்று இரவு நெடுங்கேணி சிவாநகர் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த பயிர்களுக்கும் பப்பாசிச் செய்கைகளுக்குள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைகள் அடிக்கடி இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள பயிர்களுக்கு சேதம் விளைவித்து வருவது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை. அத்துடன் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படவில்லை.

நேற்று இரவு குறித்த பகுதிக்குள் உட்புகுந்து இரண்டு ஏக்கர் பப்பாசிச் செய்கை மேற்கொள்ளப்பட பப்பாசி மரங்களை அடித்து நொருக்கி சேதம் விளைவித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளுக்குள் உட்புக வாய்ப்புக்கள் அதிகதாக உள்ளதால் இரவு வேளைகளில் அச்சத்துடன் இருந்து வருவதாகவும் தெரிவித்த அப்பகுதி மக்கள் தமக்கு யானைகளைக்கட்டுப்படுத்தவதற்கு மின்சார வேலி அமைத்துத்துதருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுடன் தொடர்பு கொண்டபோது,

நெடுங்கேணிக்குள் யானைகள் வருவது தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும், மாகாணசபையில் இடம்பெற்ற கூட்டத்திலும் நான்கு தடவைகளுக்கு மேல் தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக யாரும் நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவில்லை. இங்கிருக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன இலாகா திணைக்களம் போன்றன மட்டக்களப்பில் புத்த பிக்கு மேற்கொண்ட நடவடிக்கைபோல் மேற்கொண்டு வருகின்றனர்.

யார் சொன்னாலும் கேட்பதாக இல்லை. தற்போதும் இந்த நிலையியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதை வன்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மேலும் தெரிவித்தார்.

1 img_2413 img_2414 img_2417 img_2418 img_2420 img_2422 img_2423 img_2424 img_2425 img_2427 img_2428 img_2429 img_2430 img_2433 img_2434 img_2435 img_2437 img_2438 img_2442