சீனாவில் விற்பனை செய்யப்பட்ட iPhone 6s ரக பேட்டரிகளில் பிரச்சனை இருப்பதாகத் தெரியவந்ததையடுத்து, அதனை இலவசமாக மாற்றித்தருவதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் விற்பனையான iPhone 6s வகை செல்பேசிகள் அடிக்கடி off ஆகி விடுவதாக வாடிக்கையாளர்கள் முறையிட்டுள்ளனர்.
பேட்டரிகளில் 50 சதவீத சார்ஜ் இருந்தும் இந்த பிரச்சினை எழுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, சீன நுகர்வோர் கூட்டமைப்பு கடந்த வாரம் அப்பிள் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியது.
அதில், செல்பேசிகள் தானாக off ஆவதற்கு விளக்கமளிக்கும்படி அப்பிள் நிறுவனத்தை அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், அப்பிள் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தயாரித்து விற்பனை செய்த iPhone 6s செல்பேசிகளின் பேட்டரிகளை இலவசமாக மாற்றித்தருவதாக அறிவித்துள்ளது.
அப்பிள் வாடிக்கையாளர்கள் அங்கீகரிப்பட்ட விநியோகஸ்தர்களை அணுகி பேட்டரிகளை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என அப்பிள் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதர மாடல்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு பேட்டரிகளை இலவசமாக மாற்றித் தரும் திட்டம் எதையும் அப்பிள் அறிவிக்கவில்லை.