பாலியல் தொழில் நிமித்தம் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை எதிர்வரும் டிசெம்பர் 05ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் கணேசராசா உத்தரவு விட்டுள்ளார். புசல்லாவையைச் சேர்ந்த பெண்ணே பொலிஸாரினால் கைது செய்யபட்டவராவார்.
குறித்த வழக்கு நேற்று (21) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மாளிகாகந்த நீதிமன்றில் குறித்த பெண்ணுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் வழக்கு இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இவருக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வவுணதீவுப் பொலிஸார் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மட்டக்களப்பு நகர பகுதியில் வைத்து குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்திருந்தனர்.






