சீனாவில் லொரி மீது 56 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 17 பேர் பலி!!

578

acci
பனி மூட்டம் காரணமாக சீனாவில் லொரியொன்றின் மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் பல மாகாணங்களில் அண்மைக்காலமாகவே பனி மூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால், சாலை விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

சாங்ஸி மாகாணம் பெய்ஜிங் – குன்மிங் அதிவேகசாலையில் திங்கட்கிழமை அதிக பனி மூட்டம் காணப்பட்டதன் விளைவாக லொரி மீது 56 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வாகனங்கள் மோதிய இடங்களில், தீயணைப்பு படை பிரிவினர், உள்ளூர் பொலிஸார், மருத்துவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.