வவுனியாவில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கொலை : நடந்தது என்ன?

588

acci
வவுனியா பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22.11.2016) காலை சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மீது இருவர் தாக்குதல் நடத்தியதால் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி நேற்று (23.11.2016) காலை தெரிவித்தார். இச் சம்பவம் சம்பவம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்..

கடந்த 21.11.2016 காலை பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி வவுனியா பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தில் சண்டை இடம்பெறுவதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் சென்ற பொலிசார் விசாரணையின்போது கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்பப்பிரச்சினை என்பதை அறிந்ததும் அவர்களுக்கு பொலிசார் ஆலோசனைகள் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

பின்னர் அன்று மாலை அதே வீட்டில் மனைவியின் பிறந்ததினம் இடம்பெற்றுள்ளது. அதில் நான்குபேர் கலந்து கொண்டு மது அருந்தியுள்ளனர். அளவிற்கு அதிகமாக மது அருந்தப்பட்டுள்ளது. அதில் நிலை தடுமாறிய இருவர் காலை பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது யார் என வினவியதுடன் கருத்து முரன்பாடுகளும் அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அருகிலுள்ள வீட்டில் வசித்து வருபவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்து தனது வீட்டின் திருத்தப்பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவருக்கும் இவர்களுக்கும் இடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது.

எனவே பொலிசாரின் அவசர தொலைபேசிக்கு தகவலை அருகில் வசித்துவந்த குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்தான் வழங்கியுள்ளதாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு மது அருந்தியவர்களில் இருவர் அவரின் வீட்டிற்குச் சென்று அவர்மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அப்பகுதியில் சண்டை இடம்பெற்றுள்ளதை அங்கிருப்பவர்கள் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

மேலும் மது அருந்தியவர்களில் இருவர் அவரின் வீட்டிற்குச் சென்று குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு முன்னால் சடலம் இருப்பதாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்னரே நேற்று முன்தினம் (22.11.2016) காலை நாங்கள் சென்று எமது விசாரணைகளை மேற்கொண்டுவருகிறோம்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்ப் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.