
சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஐந்தாவது போட்டியில் நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.
இதில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கைக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனஞ்சயடி சில்வா சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.
மற்றுமொரு ஆரம்ப வீரரான குஷல் பேரேரா 7 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஏமாற்றமளித்த போதும், அதற்கு அடுத்ததாக களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல நிதானமான ஆட்டத்தை வௌிப்படுத்தினார்.
இந்தநிலையில், 58 ஓட்டங்களுடன் தனஞ்சயடி சில்வா வௌியேற, குஷல் மென்டிஸ் நிரோஷனுடன் கைகோர்த்தார்.
இருவரும் தலா 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, ஆட்டமிழந்ததோடு, சதமடிக்காது தவறவிட்டு இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.
இந்தநிலையில் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இலங்கை 330 ஓட்டங்களை விளாசியது.
இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 331 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 329 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்படி ஒரு ஓட்டத்தால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இவ் வெற்றியின் மூலம் இலங்கை அணி முத்தரப்புப் போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.





