விளையாட்டு ஹெலிகொப்டரால் வந்த வினை (வீடியோ)!!

489

1விளையாட்டு ஹெலிகொப்டர் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் புரூக்ளின் நகரை சேர்ந்த ரோமன் பிரோசெக்(வயது 19) குயின்ஸ் பகுதியில் உள்ள கட்டுமானம், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை குறித்து படித்து வருகிறார்.

இவருக்கு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் விளையாட்டு விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என்றால் அதீத பிரியம். எனவே ரிமோட் கன்ட்ரோல் மூலம் தானே இயங்கும் ஹெலிகொப்டர் ஒன்றை வடிவமைத்தார்.

இதனை கடந்த 5ம் திகதி எடுத்துக் கொண்டு புரூக்ளின் நகரில் உள்ள கால்வெர்ட் பூங்காவுக்கு சென்றார். இதை உற்சாகமாக பறக்கவிட்டு ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது.

வானில் தாறுமாறாக சுழன்றபடி பூமராங் போல விட்ட இடத்துக்கே ஹெலிகாப்டர் திரும்பி வேகமாக பறந்து வந்தது.

சுதாரிப்பதற்குள் ரோமன் தலையில் ஹெலிகாப்டர் பயங்கரமாக மோதி கீழே விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ரோமனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.