ரத்தம் சொட்ட சொட்ட பூமிக்கடியில் உயிருக்கு போராடிய சிறுவன் : பதறவைக்கும் வீடியோ காட்சிகள்!!

694

1

சிரியாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ள சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றுவதற்காக சிரியா அரசுடன் அமெரிக்க மற்றும் ரஷ்யா படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக சிரியாவின் முக்கிய நகரமான அலெப்போ மாகாணத்தின் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாக ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது.

அது ஒரு புறம் இருந்தாலும், அதன் விளைவாக ஏராளமான பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். ரஷ்யா நடத்திய தாக்குதலால் ஏராளமான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை தரைமட்டமாகின. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தரைமட்டமான இடிபாடுகளுக்கு மத்தியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் முகம் முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில் தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.

இதை அறிந்த சிரிய பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து மீட்டு அதன் பின்னர் முகத்தில் இருந்த ரத்தங்களை துடைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதே போன்று இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள சிறுமி ஒருவரை பாதுகாப்பு படையினர் மீட்பதும், அதன் பின்னர் வான்வழி தாக்குதலின் விளைவாக சிறுவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதும் போன்ற புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த தாக்குதலால் ஏராளமான பொதுமக்கள் அதிக அளவு பட்டினி கிடந்து வருவதாகவும், இதுவரை ஐ.நா சார்பில் 275,000 பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக ரஷ்யா மற்றும் சிரியா அரசு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும் என்றும் ஆனால் ரஷ்யா தரப்பில் இன்று இதற்கு நேர்மறையான பதில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2