வவுனியாவில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை!!

545

vavuniya

வவுனியா பிரபல பாடசாலையில் நேற்று முன்தினம் தரம் இரண்டு மாணவன் மீது ஆசிரியரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்..

இச்சம்பவம் இடம்பெற்ற பாடசாலை தேசிய பாடசாலையாகும் எனவே நாம் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் அப்பாடசாலையின் அதிபருடன் தொடர்பு கொண்டபோது அதிபர் உட்பட ஆசிரியர்களும் பாடசாலை மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியது தவறு என்றே தெரிவித்துள்ளனர்.

பாடசாலை சார்ந்த வியடம் என்பதால் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டாம் என்று பாடசாலை சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து தாக்கிய சம்பவம் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இருந்தும் அந்த ஆசிரியர் மீது உள்ளக விசாரணைகள் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.