லண்டன் மாணவிக்கு மான்செஸ்டரில் நேர்ந்த கொடூரம் : பதற வைக்கும் பின்னணிக் காரணம்!!

1121

girl

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் வைத்து கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மான்செஸ்டரில் உள்ள சல்போர்டில் கிரசன்ட் கிளை மெக்டொனால்டு உணவகத்திலே இத்தாக்குதல் நடந்துள்ளது.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 18 வயதான Megan Westlotorn என்ற பெண் சம்பவம் குறித்து கூறியதாவது, சம்பவத்தின் போது எனது உணவை வாங்க நான் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது, நபர் ஒருவர் அங்கிருந்த மக்களிடம் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தேன்.

அந்த நபர் உடனே என்னை எங்கிருந்து வருகிறாய் என கேட்டார். நான் லண்டனில் இருந்து வருகிறேன் என கூறினேன்.

இதனையடுத்து அந்த நபர் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க தொடங்கினார். நான் லண்டன் வாசிகளை வெறுப்பவன் என கூறினார்.

திடீரென எதிர்பாராதவிதமாக எனது முகத்தில் குத்தினார். கண்விழித்து பார்த்தபோது நான் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தேன்.

இச்சம்பவம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, என்ன நடந்தது என தெரியவில்லை. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலை தொடர்ந்து லண்டனில் உள்ள மாணவர்களை ஜாக்கிரதையாக இருக்கும் படியும் Megan Westlotorn கோரியுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மான்செஸ்டர் பொலிசார். வெள்ளையாக சுமார் 5 அடி 4 அங்குலம் உள்ள நபரை தேடி வருகின்றனர்.

மேலும், தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.