நடிகர் தனுஷ் தங்கள் மகன் என தம்பதியர் உரிமை கொண்டாடி வரும் நிலையில், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
தனுஷின் உண்மையான பெயர் கலைச்செல்வன் எனக் கூறும் அந்த தம்பதியர், தனுஷ் திருப்பத்தூரில் 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்சம் பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017ம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷிற்கு உத்தரவிட்டுள்ளது.






