பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட ஆபாசப்படம்!!

875

adult

அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

குறித்த ஆபாசப்படத்தினால் வழக்கமான நிகழ்ச்சி என காத்திருந்த மக்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து சி.என்.என் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, போஸ்டன் நகரில் தங்களது சனலை ஒளிப்பரப்பபும் ஆர்.சி.என் கேபிள் ஒபரேட்டர் தவறுதலாக குறித்த படத்தை ஒளிப்பரப்பியுள்ளதாகவும், இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எவ்வாறு தவறு ஏற்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், குறித்த வீடியோவினால் பல குடும்பங்கள் சங்கடத்திற்கு உள்ளானதாக கருத்து தெரிவித்துள்ளனர்.