சகோ­தர இன மக்­களை இழி­வு­ப­டுத்­தவோ அவ­மா­னப்­ப­டுத்­தவோ  இட­ம­ளிக்­க­மு­டி­யாது என்­கிறார் சந்­தி­ரிகா குமா­ர­துங்க !!

405

chandrika_bandaranayake

நாட்டில் இனங்­க­ளுக்கு இடையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இன­வாத மற்றும் மத­வாத அடிப்­ப­டையில் ஆத்­தி­ர­மூட்டும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் தொடர்பில் தாம­திக்­காமல் சட்­டத்தை கடு­மை­யாக செயற்­ப­டுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் தலை­வ­ரு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் மக்­க­ளி­டையே குறு­கிய இன­வாத கருத்­துக்­களை பரப்­பு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்ளும் வெவ்­வேறு இனங்­களைச் சேர்ந்த இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதை வர­வேற்­கின்றோம்.  இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களின் சமூக, அர­சியல் மதப் பிற்­புலம் அல்­லது அந்­தஸ்து என்­ப­ன­வற்றை கவ­னத்­திற்­கொள்­ளாது சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­களை கேட்டுக் கொள்­கிறோம் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அண்­மைக்­கா­ல­மாக நாட்டில் தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டு­களை எதிர்த்து வெ ளியிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது  எமது நாட்டில் அண்மைக் காலங்­களில் காணக்­கூ­டி­ய­தாக உள்ள நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்லும் குரோத மொழிப் பிர­யோகம் தொடர்­பாக தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தின் கவ­னத்­திற்குக் கொண்­ட­வ­ரப்­பட்­டுள்­ளது.

பல தசாப்­தங்­க­ளாக இரத்தம் சிந்தி ஏற்­பட்ட அழி­வு­க­ளுக்குப் பின்னர் முழு நாடும் ஒன்­றாக சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் நோக்கி மேற்­கொள்ளும் பய­ணத்­திற்கு இவ்­வா­றான நிகழ்­வுகள் சவா­லாக அமை­வது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

தமது குறு­கிய நோக்­கங்­களை அடைந்து கொள்ளும் நோக்­குடன் குரோத செயற்­பா­டு­களின் மூலம் சகோ­தர இலங்கை பிர­ஜை­களை அவ­மா­னப்­ப­டுத்தி இழி­விற்கு உட்­ப­டுத்தி இன அல்­லது மத அடிப்­ப­டையில் இலங்கை சமூ­கத்­தினுள் பிளவை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான சூழலை உரு­வாக்க இட­ம­ளிக்க முடி­யாது.

முதன் முறை­யாக இந்த அர­சாங்­க­மா­னது நிலை­யான சமா­தானம் மற்றும் நல்­லி­ணக்­கத்தின் மூலம் ஐக்­கிய இலங்­கை­யொன்றைக் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கத்தை வெளிப்­ப­டை­யாக தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. சகல இனங்­க­ளுக்கு இடை­யிலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்தின் முதன்மை நோக்­க­மாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்­டிற்கு முன்­ன­ரான காலத்தில் அரச ஆட்­சி­யா­ளர்­க­ளினால் இனங்­க­ளுக்­கி­டையில் குரோதம் மற்றும் இன­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ரவு வழங்­கப்­பட்­டது. அத்­துடன் சகோ­தர இலங்­கை­யர்­களை துன்­பு­றுத்­தி­ய­தற்கு பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இது முற்­று­மு­ழு­தாக வேறு அணு­கு­மு­றை­யாகும்.

இந்­நி­லையில் அர­சாங்­கமும் நாட்டு மக்­களும் ஒன்­றி­ணைந்து நல்­லாட்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சமூகம் ஓன்றைத் மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான பாரிய முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்கும் இக் கால­கட்­டத்தில் சவால்கள் பல­வற்றை வெற்­றி­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இத­னி­டையே 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்தின் பின்னர் திறக்­கப்­பட்­டுள்ள சந்­தர்ப்­பங்­களும் சாத­க­மான சமூக – அர­சியல் நிலை­மை­களும் முற்­போக்­காகப் பாவிக்­கப்­பட வேண்­டி­ய­வை­யாகும்.

ஒரே நாட்­ட­வ­ராக எங்­க­ளுக்குச் சொந்­த­மாக வேண்­டிய அபி­வி­ருத்தி, பொரு­ளா­தார மேம்­பாடு மற்றும் அர­சியல் ஸ்திரத்­தன்மை என்­ப­வற்றை அடைந்து கொள்­ள­வேண்டும் எனின் நாட்­டுப்­பற்­றுள்ள சகல இலங்கைப் பிர­ஜை­களும் ஒற்­று­மை­யுடன் தலை­மைத்­து­வத்தைப் வழங்கி சமா­தானம், நல்­லி­ணக்கம் மற்றும் மக்கள் சார்­பான நேர்­மை­யான ஆட்சி முறை­யொன்றைப் பெற்றுக் கொள்­வது மிகவும் அவ­சி­ய­மாகும்.

பல்­லின,பல் மதங்­களைக் கொண்ட நாடா­கிய இலங்­கையில் எங்கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் இடையில் உள்ள வேற்­று­மையை மதித்து எங்­க­ளது செழிப்­பான பன்­மைத்­து­வத்தை பேண வேண்டும். ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் உரி­மை­களை அனு­ப­விப்­ப­தற்கு சந்­தர்ப்பம் உள்ள இலங்­கை­யர்­க­ளாக பெரு­மைப்­படக் கூடிய, சம வாய்ப்­புக்­களை வழங்கக் கூடிய மற்றும் அந்­நி­யோன்­னிய கௌர­வத்­துடன் கூடிய ஒற்­று­மை­யான எதிர்­காலத் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக செயற்­ப­டு­கின்றோம். அதற்­காக குறு­கிய, மத்­திய கால மற்றும் நீண்ட காலச் செயற்­பா­டுகள் பல தற்­போது செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகியோர் உள்­ளிட்ட முழு அர­சாங்­கமும் குரோத மொழிப் பிர­யோகம் பற்றி தங்­க­ளது பல­மான அதி­ருப்­தியை தெரி­வித்­துள்­ளனர். அதற்­கான எவ்­வி­த­மான சந்­தர்ப்­பங்­க­ளுக்கும் வழங்­கப்­பட மாட்­டாது என்றும் அவர்கள் தெளி­வாகக் கூறி­யுள்­ளனர். இனங்­க­ளுக்கு இடையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இன­வாத மற்றும் மத­வாத அடிப்­ப­டையில் ஆத்­தி­ர­மூட்­டு­ப­வர்கள் தொடர்பில் தாம­திக்­காமல் சட்­டத்தை கடு­மை­யாக செயற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

வெறுப்பு மற்றும் குரோதச் செயற்­பா­டு­க­ளுக்­காக மக்­களை தூண்­டு­கின்ற குழுக்­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் சிவில் சமூகம் மற்றும் மதத் தலை­வர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் மிகவும் முற்­போக்­கான செயற்­பா­டு­களை நாங்கள் வர­வேற்­கிறோம்.

மக்­க­ளி­டையே குறு­கிய இன­வாத கருத்­துக்­களை பரப்­பு­வ­தற்­காக முயற்­சி­களை மேற்­கொள்ளும், வெவ்­வேறு இனங்­களைச் சேர்ந்த இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதை வர­வேற்­ப­தோடு இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களின் சமூக, அர­சியல் மதப் பிற்­புலம் அல்­லது அந்­தஸ்து கருத்தில் கொள்­ளப்­ப­டாது சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு குறிப்­பிட்ட அதி­கா­ரி­களை கேட்டுக் கொள்­கிறோம்.

கடந்த காலங்­களில் ஏற்­பட்ட இவ்­வா­றான குரோத கருத்துப் பிர­யோகம் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்­பாக அதிக முறைப்­பா­டுகள் வெவ்­வேறு தரப்­பி­னரால் சாட்­சி­யங்­க­ளுடன் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதற்­கான புல­னாய்­வுக்­காக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை கவனத்தில் கொண்டுவருவதற்கு விரும்புகிறோம். இந் நிகழ்வுகள் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் அதிகாரிகளினால் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

நிலையான, மேம்பட்ட பல சமூகங்களைக் கொண்ட இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கி நாங்கள் அனைவரும் உறுதியுடன் மேற்கொள்ளும் இம் முயற்சிக்கு தடங்கல்களை ஏற்படுத்துவதற்கு யாருக்கும் இடமளிக்கமாட்டோம்.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எந்த இனத்தினதும் இனவாத அல்லது தீவிரவாதக் குழுக்களுக்கும் இடமில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ள கூற்றுக்களை பாராட்டுகிறோம். இந் நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான இம் முயற்சியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு சகல இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.