வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (26.11.2016) காலை 10.00 மணிக்கு பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் ‘விவசாயமும் உணவுத் தொழில் நுட்பவியலும்’ மற்றும் ‘கேசரம்’ எனும் கவிதை நூலும் வெளியிடப்பட்டன.
பிரதம விருந்தினராக மூத்த எழுத்தாளர் தமிழ்மணி மேழிக்குமரன் அவர்கள் பங்கேற்றிருந்தார்கள். இரா.கேஸ்வரனின்.. ‘கேசரம்’ கவிதை நூலுக்கான நூலாராய்வுரையினை தமிழாசிரியர் வே.முல்லைத்தீபன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நான்கு மாணவர்கள் சேர்ந்து தொகுத்திருக்கும் ‘விவசாயமும் உணவுத் தொழில்நுட்பவியலும்’ எனும் நூலுக்கான விமர்சன உரையினை கல்வியியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பார்த்தீபன் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்வுக்கான வரவேற்புரையினை க.அஜிந்தன் நிகழ்த்த, நன்றியுரையினை ந.பிரசாந்த் அவர்கள் நிகழ்த்தினார்.
கல்லூரியின் உப பீடாதிபதிகள், கல்வியியலாளர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனும் பெருந்திரளானவர்கள் கூடியிருக்க மேற்படி இரண்டு நூல்களும் சிறப்பாக வெளியிடப்பட்டன.











