வவுனியாவில் 1000பேருக்கு மேல் அடக்கம் செய்யப்பட்ட ஈச்சங்குளம் துயிலும் இல்லம் இன்று இராணுவத்தினர் வசம் : சிவசக்தி ஆனந்தன்!!

586

dsc_0045

வவுனியா நகர மத்தில் நேற்று (27.11.2016) கார்த்திகை 27 தினம் அனுஸ்டிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இன்றையதினம் உலகம் முழவதும் வாழும் தமிழ் மக்களும் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் பொதுமக்களையும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் குறிப்பாக வடமாகாணத்திலிலும் கிழக்கு மாகாணத்திலும் யுத்தம் முடிவடைந்து எழுவருடங்கள் கடந்த நிலையிலும் கூட இந்த யுத்தகாலத்திலிலே தங்களுடைய பிள்ளைகளை உறவினர்களை நண்பர்களை போராளிகளை பறிகுடுத்த மக்கள் இன்னும் ஒரு சுதந்திரமாக தங்களுடைய இறந்த உறவுகளுக்கு ஆத்மசாந்தி பூஜை, அஞ்சலி கூட்டத்தியே நடத்த முடியாத நிலை இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த வவுனியாமாவட்டத்திலிலேயே 1000 பேருக்கு மேல் அடக்கம் செய்யப்பட்ட ஈச்சங்குளம் துயிலும் இல்லமானது இன்று இரானுவத்தினர் ஆக்கிரமித்து அவ்விடத்தில் கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் போராளிகளை அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட ஒர் நிலைமையிலேயே இன்று மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.