13 வயது மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை!!

585

s

அமெ­ரிக்கப் பாட­சாலை ஆசி­ரியை ஒருவர் 13 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் நீண்ட கால­மாக பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக சுமத்­தப்­பட்டிருந்த குற்றச்சாட்டியினை ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

ஜெமி ஹையட் எனும் 32 வய­துடைய குறித்த பெண், அமெ­ரிக்­காவின் மிச்­சிகன் மாநி­லத்தின் லெஸ்லி நக­ரி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாகப் பணி­யாற்­றி­னார்.

இவர் இப்­பா­ட­சா­லையில் கல்வி பயின்ற 13 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் முறை­யற்ற தொடர்­பு­களை ஆரம்­­பித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார். குறித்த ஆசிரியை மேற்­படி மாண­வ­னுடன் 2014 முதல் 2015 ஆம் ஆண்டு இறுதி வரை பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக கூறப்­பட்­டது.

அதை­ய­டுத்து இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் ஜெமி ஹையட் கைது செய்­யப்­பட்டார்.

ஜெமி ஹையட்­டுக்கு எதி­ராக நடை­பெற்ற வழக்கு விசா­ர­ணை­யின்­போது, மேற்­படி மாணவன் 11 வய­தா­ன­வ­னாக இருந்தேபோதே பாட­சா­லைக்கு வெளியே அவனை சந்­திக்கும் வழக்­கத்தை ஜெமி ஹையட் ஆரம்­பித்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பின்னர், இம்­மா­ண­வ­னுடன் ஜெமி ஹையட் பாலியல் உறவில் ஈடு­படத் தொடங்­கினார் எனவும் அப்­போது இம்­மா­ணவன் 13 வயது சிறு­வ­னாக இருந்தான் எனவும் சட்­டத்­த­ர­ணிகள் தெரி­வித்­தனர்.

இம்­மா­ண­வ­னுக்கு துப்­பாக்கி மற்றும் கையடக்கத்தொலை­பே­சியை ஜெமி ஹையட் வழங்­கினார் எனவும் அரச தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் நீதி­மன்றில் தெரி­வித்­தனர்.

துப்­பாக்­கியை வழங்­கும்­போது இம்­மா­ணவன் 14 வய­தா­ன­வ­னாக இருந்தான். தனது கைத்­துப்­பாக்கி காணாமல் போன­தாக ஜெமி ஹையட் முறை­பாடு செய்­தி­ருந்தார். ஆனால், அத்­துப்­பாக்­கியை மேற்படி சிறு­வ­னுக்கு ஜெமி ஹையட் வழங்­கி­யி­ருந்தார் என்­பது பின்னர் தெரியவந்­தது.

இம்­மா­ண­வ­னுடன் ஜெமி ஹைட் இரு மாத காலம் ஒன்­று­விட்டு ஒருநாள் தொடர்ச்­சி­யாக பாலியல் உறவில் ஈடு­பட்டார் எனவும் நீதிமன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

தன் மீதான குற்­றச்­சாட்டை ஜெமி ஹையட் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கான தண்டனை இன்னும் அளிக்கப்படவில்லை. அவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

s1