அவுஸ்திரேலியாவில் நபரொருவர் தனது இளமைக் காலத்தில் மாடு ஒன்றுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு தன்னை ஒருவர் நிர்ப்பந்தித்ததாக குற்றம் சுமத்தியுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான அலன் கென்னத் புரூக்ஸ் எனும் நபர் மீதே அவர் இக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தனது சிறு பருவத்தில் நடந்த இந்த சம்பவத்தை தான் பணியாற்றிய நிறுவனத்தின் நண்பர்கள்கள் பின்னர் அறிந்துகொண்டதால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நபர் சிறுவனாக இருந்தபோது அலன் கென்னத் புரூக்ஸினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அலன் கென்னத் புரூக்ஸ் குற்றவாளி என கடந்த செப்டெம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. மிருகத்தை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய குற்றச் சாட் டை யும் புரூக்ஸ் ஒப்புக்கொண்டார்.
கடந்த வாரம் சிட்னியிலுள்ள டோனிங் மாவட்ட நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொண்ட வேளையில், பாதிக்கப்பட்ட நபர் நான் தான் என்று தான் பணியாற்றும் நிறுவனத்தின் சக பணியாளர்கள் அறிந்து கொண்டமையால், அவர்களால் தான் கேலிக்கு ஆளானதாகவும் அதனால் தான் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டதாகவும் சாட்சிமளித்த நபர் தெரிவித்தார்.
குறித்த வழக்கில் குற்றவாளியான அலன் கென்னத் புரூக்ஸுக்கான தண்டனை எதிர்வரும் வருடம் பெப்ரவரி மாதம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






