கண்டி துப்பாக்கிச் சூடு : சிக்கினார் மூன்றாவது சந்தேகநபர்!!

683

kandy

கண்டி-அன்கும்புர பகுதியில் கடந்த வாரம் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் ஹோமாகம பகுதியில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற தினத்திலேயே ,சந்தேகநபர்களில் ஒருவர் அங்குபுர – கபல்கஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து டி.56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ரனால பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இரண்டாவது சந்தேகநபரும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

காதல் விவகாரம் காரணமாகவே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளமதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.