20 வயதில் நாம் செய்யும் 10 தவறுகள்!!

394

Teenagers with arms crossed

அழகு விடயத்தில் நாம் அதிகமாக கவனம் செலுத்துவது 20 வயதில் தான். ஏனெனில் அந்த வயதில்தான் ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மீது ஒரு வித ஈர்ப்பு ஏற்படும்.

அதற்கு முன்னர் நீங்கள் அழகான ஆடைகளை தெரிவு செய்து அணிந்து வந்தாலும், அதில் பெற்றோரின் பங்களிப்பும் கொஞ்சம் இருக்கும். அதன்பின்னர் 20 வயதை நெருங்கும் போது பேஷன் விடயத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிக்கும் நீங்கள் ஆர்வக்கோளாறால் சில தவறுகளையும் செய்கிறீர்கள்.

அப்படி 20 வயதில் பேஷன் என்ற பெயரில் நீங்கள் செய்யும் தவறுகள் இதோ,

நேர்காணலுக்கு செல்லும் போது, First Impression Is the Best Impression என்ற வாக்கியத்தை மனதில் வைத்துகொண்டு, உங்கள் நிறத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத ஆடைகளை அணிந்து கொண்டு செல்வது.

இந்த ஆடை உனக்கு நன்றாக இருக்கும். வாங்கி அணிந்துகொள் என்று உங்கள் நண்பர்கள் கூறினால், உடனடியாக அந்த வார்த்தைகளை உண்மை என நம்பி சென்று அந்த நிறத்தில் ஆடை வாங்கி அணிந்துகொள்வது. இதனால் உங்கள் பணத்தினை வீணாக்கிகெள்கிறீர்கள். ஆனால், அந்த ஆடை உங்களுக்கு எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்காது.

என்னிடம் இந்த பர்ஷ் இருந்தால் அது எனக்கு மிகவும் லக்கியாக இருக்கும். அதில் பணம் வைத்திருந்தால் என்னிடம் எப்போதும் பணம் இருந்துகொண்டே இருக்கும் என நினைத்து தேவையற்ற பர்ஷ்களை வாங்கி குவிப்பது.

ஒரு பொருளோ அல்லது ஆடையே பிடித்துவிட்டது என்பதற்காக, அதே வகையில் அதிகமான ஆடைகளை வாங்கி குவிக்காதீர்கள். இது உங்களுக்கு வேண்டுமென்றால் நன்றாக தெரியும். ஆனால் பார்ப்பவர்களின் கண்களுக்கு நீங்கன் ரசனையற்ற நபரோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.

மிகவும் குட்டையான ஆடைகளை தெரிவு செய்து அணிவது.

காலணிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதன் நிறம், அதில் பதிக்கப்பட்டுள்ள டிசைன்கள் என அனைத்தும் அழகாக இருக்கிறது என்று நம்பி காலணிகளை வாங்குவது. ஆனால், இப்படி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் காலணிகளில் தான் ஆபத்து இருக்கும். அவை உங்கள் கால்களுக்கு பொருத்தமில்லாமல் நாளடைவில் உங்கள் கால்களில் அரிப்பினை ஏற்படுத்திவிடும்.

ஒரு ஆடை உங்களுக்கு பிடித்துவிட்டது என்றால், அதன் தரத்தை பார்க்காமல் அது என்ன விலை என்றாலும் அதை கொடுத்து வாங்கிவிடுவது தவறு.
சில நேரங்களில் அதிக விலை கொடுத்து ஆடைகளை வாங்கிவிடுவீர்கள். ஆனால் அந்த ஆடைகள் அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாமல், ஏதேனும் விழாக்களின் போது மட்டும் அணியும் ஆடைகளாக இருக்கும். எனவே, இதுபோன்ற ஆடைகளை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் அணிய வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். எனவே கூடுமானவரை இதுபோன்ற ஆடைகளை அதிகமாக எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

ட்ரொண்டாக ஒரு ஆடை வலம் வருகிறது என்றால், அதனை வாங்கி அணிந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமா என தெரிந்துவிட்டு வாங்குங்கள்.

ஷொப்பிங் செல்வது என்றால், தேவை இருந்தால் மட்டுமே செல்லுங்கள். அதனை தவிர்த்து பொழுதுபோக்குக்காக செல்வதை பழக்கம் கொண்டிருந்தால் கண்ட பொருட்களை வாங்கி பணத்தினை வீணாக்கும்பழக்கம் ஏற்படும்.