பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விபத்து : 76 பேர் உயிரிழப்பு!!

619

flight-accident

பிரேசில் நாட்டின் உள்ளூர் கால்பந்து விளையாட்டு வீரர்களுடன் சென்ற விமானம் ஒன்று கொலம்பியா நாட்டில் விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களில் 25 பேரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 76 பேர் உயிரிழந்திருப்பதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐவரில் மூவர் கால்பந்து விளையாட்டு வீரர்கள் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் இருந்து கொலம்பியா நாட்டின் மெடலின் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு CP2933 என்ற விமானம் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விமானத்தில் பைலட், சிப்பந்திகள் 9 பேர், 72 பயணிகள் என மொத்தம் 81 பேர் இருந்துள்ளனர்.

விபத்து பகுதியிலிருந்து இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கோபா சூடாமெரிக்கா கோப்பைக்காக பிரேசில் நாட்டின் சேப்பகான்ஸே கால்பந்து அணி நாளை அட்லெடிகோ அணியுடன் விளையாடவிருந்தது.

போட்டி நடைபெறும் மெடலின் நகருக்குச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.