யாழ். புறநகரப் பகுதியில் இளைஞர் ஒருவர் செலுத்திய ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளுக்குள் திடீரென வெளிப்பட்ட ஒரு பாம்பினால் கண்னாதிட்டிச் சந்தியில் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ். நகருக்கு பணி நிமித்தம் சுமார் ஒரு மணியளவில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது ஒரு பாம்பு அசைவதனை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாம்பினை அகற்ற முயன்றுள்ளார். ஆனால், அவர் நீண்ட நேரம் போராடியும் முடியாமல் போகவே மோட்டார் வண்டி திருத்துனர் வரவழைக்கப்பட்டார்.
அவரோ மோட்டார் சைக்கிளின் பாகங்களை கழற்றி பாம்பினை விரட்ட முயன்றார். சைக்கிளின் ஒவ்வொரு பாகங்களை கழற்ற பாம்பானது மறுமுனைக்கு நகர்ந்த வண்ணமே இருந்தது.
இறுதியில் சுமார் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பாம்பு அகற்றப்பட்டது. இதன்காரணமாக சிறிது நேரம் கண்ணாதிட்டிச் சந்தியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.






