பார்ஸிலோனாவின் உயரமான கட்டடத்தின் சுவரில் பாதுகாப்பு சாதனமின்றி ஏறி இறங்கிய ஸ்பைடர் மேன்!!

397

 
ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள 38 மாடி கட்­ட­ட­மொன்றின் சுவரில், பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் என வர்­ணிக்­கப்­படும் அலெய்ன் ரொபரட்ஸ் எவ்­வித பாது­காப்புச் சாத­னங்­களும் இன்றி ஏறி இறங்கினார்.

பிரான்ஸை சேர்ந்த 54 வய­தான அலெய்ன் ரொபர்ட்ஸ், கட்­ட­டங்­களின் சுவர்­களில் ஏறு­வதில் புகழ்பெற்­றவர். “பிரெஞ் ஸ்பைடர்” மேன் என இவர் வர்­ணிக்­கப்­ப­டு­கிறார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவர் ஸ்பெய்னின் பார்­ஸிலோனா நக­ரி­லுள்ள டொரி அக்பர் கட்­ட­டத்தின் சுவரில் ஏறினார். 38 மாடி­களைக் கொண்ட இக்­கட்­டடம் பார்­ஸி­லோனா நகரின் மிக உய­ர­மான கட்டடமாக விளங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இக்­கட்­டத்தின் கண்­ணாடிச் சுவர்­களில் பாது­காப்புச் சாத­னங்கள் எது­வு­மின்றி அலெய்ன் ரொபர்ட்ஸ் ஏறு­வதை பொது­மக்­களும் பொலி­ஸாரும் திகைப்­புடன் பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். ஆனால், அலெய்ன் ரொபர்ட்ஸ் அச்சம் எது­வு­மின்றி இக்­கட்­ட­டத்தின் சுவர்­களில் ஏறி இறங்­கினார்.

இவர் உலகின் மிக உய­ர­மான கட்­ட­ட­மான துபா­யி­லுள்ள புர்ஜ் கலீபா கட்­டடம் மற்றும் ஈபிள் கோபுரம் உட்­பட 100 இற்கும் அதி­க­மான கட்டடங்களின் சுவர்களில் பாது காப்பு சாதனங்களின்றி ஏறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

s1 s2 s3