உலகிலேயே மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த ஆண்!!

583

 
ஹவாயில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தவர் தாமஸ் ட்ரேஸ் பீட்டி. இவர் 2002ல் பாலியல் மாற்று சிகிச்சை செய்துக் கொண்டதால், அனைவரும் இவரை பிரபலமாக “The Pregnant Man” என அழைப்பார்கள்.

மேலும் இவர் தன்னுடைய இளம் வயதிலேயே ஒரு பெண் மொடலாக அசத்தினார். குறிப்பாக மிஸ் ஹவாய் போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதியான போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தாமஸ், டேக்வாண்டோ எனும் கோரிய தற்காப்பு கலையில் ப்ளேக் பெல்ட் பெற்று, இளங்கலை அறிவியல் ஆரோக்கியம் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இது போன்ற அனைத்திலும் பெருமை வாய்ந்த தாமஸ், 1997-ல் எம்பிஏ பட்டப் படிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் தாமஸ் நான்சி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். பின் நான்சியால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் இருந்ததால், நான்சியின் கணவனான தாமஸ், குழந்தையை பெற்றெடுக்க முடிவெடுத்தார்.

இநிலையில், தாமஸ்க்கு 2002-ல் ஒரு அறுவை சிகிச்சை செய்து உடலில் செஸ்ட் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் செய்யப்பட்டு, 2007-ல் முதன் முறையாக தன்னுடைய குழந்தையை அவரே பெற்றெடுத்தார்.

தாமஸ்க்கு முதல் மற்றும் இரண்டாவது முறையாக இரண்டு பெண் குழந்தைகளும், 2010-ல் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

பின் இவர் பெண்ணாக பிறந்து, ஆணாக மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், 2012-ல் அறுவை சிகிச்சையின் மூலம் இவரது இனபெருக்க உறுப்பை நீக்கி விட்டார்.

ஏனெனில் நான்சி தன்னுடைய குழந்தைகளை மிக கொடூரமாக தாக்கும் காணொளிப்பதிவை தாமஸ் பார்த்ததும், அவர் தன்னுடைய 9 வருட இல்வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நான்சியை விவாகரத்து செய்து விட்டார்.

தாமஸ் இப்போது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவளித்து, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் தாமஸ் சமீபத்தில், அம்பர் நிகோலஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார்.

2 3 4