தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்திதான் : விசு ஆதாரத்துடன் பேட்டி!!

495

danush

நடிகர் தனுஷின் வளர்ச்சி இன்று நாடறிந்தது. அவரது தனிப்பட்ட வாழ்கையும் சரி திரையுலக வாழ்கையும் சரி எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சீராக போய்க்கொண்டிருக்கிறது. அவரது அண்ணன், மனைவி, மாமனார் என எல்லோருமே சினிமாவில் ஜொலிக்கும் பிரபலங்கள்.

அப்படி இருக்கும்போது கடந்த சில வருடங்களாகவே சிவகங்கையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தனுஷ் எங்களுடைய மகன் என கூறி வருகிறார்கள். அதுபோக பொலிஸாரிடமும் புகார் கொடுத்துள்ளார்கள். இதைதொடர்ந்து நடிகர் தனுஷ், மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கள் மகன் தனுஷ் 16 வயதில் வீட்டைவிட்டு ஓடியதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் இதுகுறித்து இயக்குனர் விசு கூறுகையில், ” என்னிடம் உதவியாளராக பணியாற்றியவர் கிருஷ்ணமூர்த்தி. அவர்தான் பின்னாளில் கஸ்தூரி ராஜா என பெயர் மாற்றி இயக்குனரானார்.

இவரது மகன் தனுஷை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அவர்கள் குடும்பத்துடன் நான் எடுத்துகொண்ட புகைப்படம் கூட என்னிடம் உள்ளது” என்றார். குழந்தை முதலே தனுஷ், கஸ்தூரி ராஜாவுடன் இருந்ததற்கான ஆதாரமாக அவர்களின் பழைய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.