வவுனியாவில் இளைஞர் குழுவின் தாக்குதலுக்குள்ளான பிரபல பாடசாலை மாணவன்!!

526

student

வவுனியாவில் இளைஞர் குழு ஒன்று பாடசாலை மாணவன் ஒருவர் மீது மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் நூற்றாண்டு பழமை வாய்ந்த பாடசாலையில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் குழுவின் தாக்குதலுக்குள்ளான பிரபல பாடசாலை மாணவன் தலையில் காயமடைந்து வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கி காயப்படுத்தி விட்டு இந்த குழு தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.