மட்டக்களப்பு – தளவாய் கிராமத்தில் தாய்ப்பால் புரையேறியதில் 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலையில் குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்டிருந்ததனால் தாய்ப் பால் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் குழந்தையின் அழுகை திடீரென நின்ற தனையடுத்து குழந்தையை ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தை இடைவிடாது அழுதுகொண்டிருந்தபோது கொடுக்கப்பட்டபால் சுவாசக் குழாய்க்குச் சென்று மூச்சுத்திணறியதனால் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம் தாரிக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மரணவிசாரணை மேற்கொண்டதையடுத்து பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






