இடைவிடாது அழுது கொண்டிருந்த 3 மாத குழந்தைக்கு கொடுக்கப்பட்ட பால் புரையேறியதில் உயிரிழந்தது!!

591

baby

மட்­டக்­க­ளப்பு – தளவாய் கிரா­மத்தில் தாய்ப்பால் புரையேறியதில் 3 மாத ஆண் குழந்தை உயி­ரி­ழந்த சம்­பவம் நேற்று இடம்­பெற்­றுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர்.

அதி­கா­லையில் குழந்தை தொடர்ச்சியாக அழுது கொண்­டி­ருந்­த­தனால் தாய்ப் பால் கொடுக்கப்பட்டுள்­ளது. எனினும் குழந்­தையின் அழுகை திடீ­ரென நின்­ற­ த­னை­ய­டுத்து குழந்­தையை ஏறாவூர் ஆதார வைத்திய­சா­லையில் அனு­மதித்துள்ளனர்.

பின்னர் அந்தக் குழந்தை உயி­ரி­ழந்­துள்ள­து. குழந்தை இடை­வி­டாது அழுது­கொண்டி­ருந்தபோது கொடுக்­கப்­பட்­டபால் சுவாசக் குழாய்க்குச் சென்று மூச்­சுத்திணறிய­தனால் மரணம் சம்பவித்துள்ளதாக பிரே­த ­ப­ரி­சோ­தனை மேற்­கொண்ட வைத்­திய அத்­தி­யட்­சகர் எம்.எச்.எம் தாரிக் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

திடீர் மரண விசா­ர­ணை­ய­தி­காரி எம்­.எஸ்.எம். நஸீர் மர­ண­வி­சா­ரணை மேற்கொண்டதையடுத்து பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.