5 ஆண்டுகளாக தூக்கத்தில் இருக்கும் காதலி : காதலனின் வினோத முயற்சி?

412

1

பிரித்தானியாவில் சுமார் ஐந்து ஆண்டு காலமாக தூக்கத்தில் இருக்கும் காதலிக்காக, காதலன் ஒருவர் தற்போது வரை காத்திருக்கும் சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Stockport – Cheshire பகுதியைச் சேர்ந்தவர் Beth Goodier (22). இவருக்கு Dan (22) என்ற காதலன் உள்ளார். Beth Goodier க்கு 17 வயது இருக்கும் போது தூக்கம் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளது. அன்று முதல் நாள் ஒன்றுக்கு சுமார் 22 மணி நேரம் தூக்கத்திலே கழித்து விடுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், Beth Goodier க்கு Kleine-Levin Syndrome (KLS) என்ற ஒரு வித தூக்கம் தொடர்பான நோய் ஏற்பட்டுள்ளதாகவும், இது அரிதான ஒன்று எனவும், இது தொடர்பாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து அவரின் தாயார் கூறுகையில், இந்த நோயின் தாக்கம் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் தன் மகளுக்கு ஏற்பட்டதாவும், அவள் தன்னுடைய வாழ்நாளில் சுமார் 75 சதவீதம் தூங்கியே வீணடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அவள் நாள் ஒன்றுக்கு 22 மணிநேரம் தூங்குவதாகவும், இடைப்பட்ட நேரத்தில் எழுந்து சிறிதளவு உணவு எடுத்துக் கொண்டு மீண்டும் உறங்கிவிடுவாள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவளுக்கு 16 வயது இருந்த பொழுது சுமார் 6 மாதங்கள் வரை அவள் தூங்கிவிட்டாள் என்றும் அதன் பின்னரே அவள் சுய நினைவுக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

அவரின் காதலனான Dan ஒரு ஆரம்ப பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் ஒரு நல்ல மனிதன் என்றும், அவருக்காகவே இவள் விரைவில் குணமடைய வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் இது போன்று 100க்கும் மேற்பட்டோர் வித்தியாசமான நோயினால் தாக்கப்பட்டு அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது.

2 3 4