யாழில் நாடா புயலினால் மரம் விழுந்து இளைஞன் பரிதாபமாகப் பலி!!

1638

dead

இன்று(01.12.2016) காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக வீதியால் சென்றுகொண்டிருந்த சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதையுடைய சச்சிதானந்தம் கஜந்தன் என்ற இளைஞர் மரம் முறிந்து விழுந்ததில் அதேயிடத்தில் பலியாகியுள்ளார்.

சாவகச்சேரி நீதிமன்ற வழக்கொன்றிற்காக உந்துருளியில் சென்றுவிட்டு திரும்பிச் செல்கையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழில் பலத்த காற்றுடன் தொடர்மழை பெய்துவருவதுடன் மக்களை அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

11 12 13 14 15 16