வவுனியாவில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!!

269

vavuniya_court

கடந்த 10 மாதங்களில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, தண்டப்பணம் அறவிடப்பட்டதாக வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஏ.ஜி.எஸ்.கே. செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

மதுவரித் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியில் 315 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

இதன்படி சட்டவிரோத அரச சாராயம் விற்பனை செய்தமை 11,

சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானம் விற்பனை 04,

அளவுக்கதிகமாக சாராயம் உடமையில் வைத்திருந்தமை 01,

சட்டவிரோதமாக அளவுக்கதிகமாக வெளிநாட்டு மதுபானம் உடமையில் வைத்திருந்தமை 01,

சட்டவிரோத கள்ளு விற்பனை 132,

சட்டவிரோதமாக கள்ளு உடமையில் வைத்திருந்தமை 06,

சட்டவிரோத புகையிலை உற்பத்தி பொருட்களை வைத்திருந்தமை 04,

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தமை 150,

மாபா எனப்படும் போதைப் பொருள் விற்பனை 02, கஞ்சா உடமையில் வைத்திருந்தமை 04 என 315 பேருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுவரி பரிசோதகர் எஸ்.சுரேஸ், மதுவரி காவலர்களான கே.துஸ்யந்தன், ஆர்.பி.திஸாநாயக்கா, சீ.டீ.சில்வா உள்ளடங்கிய எமது குழுவினரே குறித்த செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தனர் எனவும் மாவட்ட பொறுப்பதிகாரி செனவிரட்ன தெரிவித்தார்.