வவுனியா பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் ஆண் தாதிய உத்தியோகத்தர் மீது நேற்று இரவு (01.12.2016) வைத்தியசாலையின் விடுதியிலுள்ள வளவிற்குள் வைத்து தலைக்கவசம், ஜக்கட் அணிந்து இனந்தெரியதாக நபர் ஒருவர் பின் தொடர்ந்து மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் வைத்தியசாலையின் உன்னதமான சேவையினை வழங்கும் தாதியர் மீது தாக்குதல் நடத்தியதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் சிலரும் இணைந்து இன்று 02.12.2016 மதியம் 12 மணியளவில் உணவு இடைவேளையின் போது தமது எதிர்ப்பினை தெரிவித்து வைத்தியசாலையின் முன் வழியாக பேரணியாக சென்று கண்டி வீதியால் பின் வாசல் வழியாக வைத்தியசாலையினை சென்றடைந்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான ஆண் தாதிய உத்தியோகத்தர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பொலிசார் விசாரணைகள் மேற்கொள்ளாத பட்டசத்தில் தொடர்ந்தும் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் இன்றை போராட்டத்தில் கலந்து கொண்ட தாதிய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.





















