மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!!

184


batti

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.நோய்வாய்ப்பட்டு நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் வைத்தியசாலையில் இருந்த நிலையில் இவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாமாங்கத்தைச் சேர்ந்த தி.சிவதாஸ் என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பலியாகியுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் பொதுமக்களால் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த சம்பவம் கொலையா? தற்கொலை? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.