இரத்தத்தை காதலன் சுவை பார்ப்பதற்கு அனுமதித்த பின் காதலனை கத்தியால் குத்திய பெண்!!

786

This undated photo provided by the Greene County Sheriff's Office in Springfield, Mo., shows Victoria Vanatter of Springfield, Mo. Police say Vanatter allowed her intoxicated boyfriend to drink her blood then stabbed the wannabe vampire during a subsequent argument on Nov. 23, 2016. Vanatter pleaded not guilty Monday, Nov. 28 to charges of first-degree domestic assault and armed criminal action. (Greene County Sheriff's Office via AP)

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர், தனது உடலை கத்­தியால் கீறி தனது இரத்­தத்தை காதலன் சுவை பார்ப்­ப­தற்கு அனு­ம­தித்த பின்னர், வாக்­கு­வாதம் ஒன்­றை­ய­டுத்து காதலனை குத்தி படுகாயப்படுத்­திய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மிசோரி மாநி­லத்தின் ஸ்பிரிங்பீல்ட் நகரைச் சேர்ந்த விக்­டோ­ரியா வனாட்டர், எனும் இந்த யுவ­தியும் அவரின் காத­லனும் இரத்தம் உறிஞ்சும் வாம்­ப­யர்கள் பற்றி பேசிக் கொண்­டி­ருந்­த­னராம்.

அதன்பின் தனது உடலை கத்­தியால் கீறி, தனது இரத்­தத்தை காதலன் சுவைத்துப் பார்ப்­ப­தற்கும் விக்­டோ­ரியா அனு­ம­தித்தார் என பொலி­ஸாரின் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

எனினும், பின்னர் விக்­டோ­ரி­யா­வுக்கும் மது­போ­தை­யி­லி­ருந்து அவரின் காத­ல­னுக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­டது. இதன்­போது, ஆத்­தி­ர­ம­டைந்த விக்­டோ­ரியா வனாட்டர், தனது காத­லனை கத்தியால் குத்­தினார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இச்­ சம்­ப­வத்தில், விக்­டோ­ரி­யாவின் காத­ல­னுக்கு முதுகில் காயங்கள் ஏற்­பட்­டன. இதை­ய­டுத்து, அவ­சர சேவைப் பிரி­வி­னரால் மேற்­படி இளைஞன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

விக்­டோ­ரி­யாவை பொலிஸார் கைது செய்­தனர். அவரை 150,000 டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளார்.