முன்னாள் கணவரினால் கடுமையாகத் தாக்கப்பட்ட பிரேஸில் முன்னாள் அழகுராணி!!

610

 
பிரே­ஸிலின் முன்னாள் அழ­கு­ரா­ணி­யொ­ருவர், தனது முன்னாள் கண­வ­ரினால் கடு­மை­யாகத் தாக்கப்பட்ட நிலையில், காய­ம­டைந்த முகத்­துடன், தான் எதிர்­கொண்ட வன்­முறை குறித்து கூறும் வீடியோவொன்றை இணை­யத்தில் வெளி­யிட்­டுள்ளார்.

ரெனாட்டா லுஸ்­டோசா எனும் இந்த யுவதி, பிரே­ஸிலில் நடை­பெற்ற பல்­வேறு அழ­கு­ராணி போட்டிகளில் வெற்­றி­யீட்­டி­யவர். 2007 ஆம் ஆண்டில் மிஸ் பஹியா அழ­கு­ராணி போட்­டியில் முத­லிடம் பெற்ற அவர், 2011 ஆம் ஆண்டில் மிஸ் பியாயு அழ­கு­ராணி போட்­டி­யிலும் முத­லிடம் பெற்­றமை குறிப்பிடத்­தக்­கது.

தற்­போது 27 வய­தான ரெனாட்டா லுஸ்­டோசா, மொட­லா­கவும் அழ­குக்­கலை நிபு­ண­ரா­கவும் பணியாற்றிவந்தார். தனது அழ­கினால் ஏரா­ள­மா­னோரை கவர்ந்த ரெனாட்டா, தனது முகத்தில் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்­படும் வீடி­யோவை சில தினங்­க­ளுக்கு முன் வெளி­யிட்டார்.

தனது முன்னாள் கணவர் தன்னைக் கடு­மை­யாக தாக்கி காய­மேற்­ப­டுத்­தி­ய­தாக அழு­து­கொண்டே அவ் ­வீ­டி­யோவில் ரெனாட்டா கூறினார். தமது இரு வய­தான மகனின் முன்­னி­லையில் இத்­ தாக்­குதல் இடம்­பெற்­ற­தா­கவும் தெரி­வித்தார்.

அற்­ப­மான விட­யத்­துக்­காக நான் மீண்டும் உடல் ரீதி­யான வன்
மு­றைக்­குள்­ளானேன். யார் மீது தவறு என்­பது முக்­கி­ய­மல்ல, ஒரு பெண்ணை ஆண் ஒருவர் தாக்குவதை எத­னாலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. இந்தத் தாக்­கு­தல்கள் அனைத்தும் எனது மகனின் முன்னிலையில் நடந்­தன.

அனைத்­தையும் அவன் பார்த்தான்’ என ரெனாட்டா தெரி­வித்தார். ‘இந்த மாதி­ரி­யான ஓர் இராட்­ச­தனை நான் என்ன செய்ய முடியும்? பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று முறைப்­பாடு செய்தால், அவரை பொலிஸார் துரத்தி, கைது செய்­வார்கள்.

ஆனால். மறுநாள் அவர் விடு­த­லை­யா­கி­வி­டுவார். என்னை கொல்­லப் ­போ­வ­தாக மில்­லியன் கணக்கான தட­வைகள் அவர் கூறி­யுள்ளார். அவர் இப்­படி செய்யக்கூடும் என்­பதில் எனக்கு சந்­தேகம் இல்லை.

நான் ஏற்­கெ­னவே தாக்­கப்­பட்டு­ விட்டேன். இது குறித்து பொலி­ஸா­ரிடம் முறை­யி­டு­வ­தில்லை என தீர்மா­னித்­துள்ளேன். நான் தாக்­கப்­பட்­டுள்ளேன்… தாக்­கப்­பட்­டுள்ளேன்’ என அவ்­ வீ­டி­யோவில் ரெனாட்டா மேலும் கூறினார் ரெனாட்டா, ஹென்றிக்.

எனினும், இவ்­ வீ­டி­யோவை பார்­வை­யிட்­ட­வர்கள், வீட்டு வன்­மு­றைகள் தொடர்­பான விசா­ரிக்கும் அதிகா­ரி­க­ளுக்கு இத் ­த­க­வலை தெரி­வித்­தனர். அதன்பின்னர் தனது மனதை மாற்­றிக்­கொண்ட ரெனாட்டா பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்­துள்ளார்.

வீட்டில் தான் தாக்­கப்­பட்ட விட­யத்தை அம்­ப­லப்­ப­டுத்­திய ரெனாட்­டாவை துணிச்­ச­லான பெண் என ஊட­கங்கள் பாராட்­டி­யுள்­ளன. ரெனாட்­டாவை பின்னர் மருத்­து­வர்கள் பரி­சோ­தித்­த­துடன், தாக்­குதல் தொடர்­பாக பொலி­ஸா­ரிடம் அவர் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக முறைப்­பாடு செய்தார்.

பொலிஸ் அதி­கா­ரி­யான அன்ட்­ரெஸா கார்­வெல்ஹோ இது தொடர்­பாக கூறு­கையில், ‘எமக்கு மேற்­படி வீடியோ கிடைத்­த­வுடன், ரெனாட்டா ஏற்­கெ­னவே முறைப்­பாடு எதுவும் செய்­துள்­ளாரா என நாம் எமது பதி­வு­களை ஆராய்ந்தோம். அவ்­வா­றான முறைப்­பாடு எதுவும் காணப்படவில்லை.
அதன்பின் நாம் அவரை விசாரணைக்கு அழைத்தோம்’ என்றார். இதேவேளை, தான் தவறு எதுவும் செய்யவில்லை என ரெனாட்டாவின் முன்னாள் கணவரான ஹென்றிக் தெரிவித்துள்ளார். தான் நிரபராதி என்பதை ஹென்றிக் நிரூபிப்பார் என ஹென்றிக்கின் சட்டத்தரணி கூறியுள்ளார்.

a1 a2 a3 a4

ரெனாட்டா வெளி­யிட்ட வீடி­யோ: