
23 வயதான இளம் பெண் ஒருவர் நான்கு கணவன்களுடன் வாழ்ந்து ஏமாற்றி விட்டு ஐந்தாவதாக ஒரு இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்த அதிர்ச்சி சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வரும் திருச்சி திருவெரும்பூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் அண்மையில் மாலதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் மாலதியை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் அவரை தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மாலதியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாலதி கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஸ்டீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
இருவரும் ஒருநாள் வேளாங்கன்னிக்கு சென்றிருந்தபோது, மாலதிக்கு அங்கு டீக்கடை நடத்தி வந்த நவநீதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி ஸ்டீபனுடன் தகராறில் ஈடுபட்டு வேளாங்கன்னியிலுள்ள நவநீதனுடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வாழ்க்கை நடத்தியுள்ளார்.
வேளாங்கன்னியில் நவநீதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது நாகையை சேர்ந்த ஒரு இளைஞருடன் மாலதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞனுடன் ஓட்டம் பிடித்தார் மாலதி. இருவரும் திருப்பூர் சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞருடன் மீண்டும் மாலதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நாகையை சேர்ந்த இளைஞரை ஏமாற்றிவிட்டு வினோத்தை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் மாலதி. ஒன்றரை ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த அவர்கள் ஒருநாள் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களுடன் வினோத்தின் நண்பன் அசோக்கும் சென்றுள்ளான்.
அப்போது அசோக்கிற்கும் மாலதிக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலதி வினோத்தை பிரிந்து அசோக்குடன் அவரது வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்கிற்கும் மாலதிக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
தற்போது மாலதியின் திருமண கதைகளை அறிந்த வினோத்தும், அசோக்கும் அவரை ஏற்க மறுத்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் மாலதிக்கு அறிவுறை கூறி அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.





