ஜனா­தி­பதி தேர்­தலில் ஒரு­போ­தும் மிஷெல் போட்­டி­யிட மாட்­டார் : ஒபாமா திட்­ட­வ­ட்­டம்!!

1311

FILE - This April 11,2014 file photo shows President Barack Obama and first lady Michelle Obama smile after disembarking Air Force One at John F. Kennedy International Airport in New York. When President Barack Obama travels abroad, getting just the leader of the free world doesn’t seem to be enough. Countries want the first lady, too. But Michelle Obama won’t join her husband when he heads to Asia next week and her absence is likely to sting, especially in Japan. It’s the first of four countries on Obama’s travel schedule and the only one welcoming him on an official state visit. (AP Photo/John Minchillo, File)

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் மிஷெல் ஒபாமா ஒரு­போதும் தேர்­தலில் போட்­டி­யிட மாட்­டா­ரென ஒபாமா திட்­ட­வட்­ட­மாக கூறி­யுள்ளார். நடந்து முடிந்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்­ட­னுக்­காக பிர­சாரம் செய்­தவர், ஜனா­தி­பதி ஒபா­மாவின் மனைவி மிஷெல் ஒபாமா.

“நான் ஜனா­தி­பதி பத­விக்கு வந்தால் மிஷெல்லுக்கு அமைச்சு பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்­தலில் அவர் தோல்­வியை தழுவ நேரிட்­டது.

இந்தநிலையில் அடுத்த தேர்­தலில் மிஷெல் ஒபாமா போட்­டி­யி­டக்­கூடும் என யூகங்கள் எழுந்­தன. இது தொடர்­பாக ‘ரோலிங் ஸ்டோன்’ என்ற பத்­தி­ரி­கைக்கு ஒபாமா அளித்த செவ்­வி­யின்­போது அவர், “மிஷெல் ஒரு­போதும் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட மாட்டார்.

நீங்கள் அறிந்­த­படி மிஷெல் திறமை வாய்ந்­தவர். அமெ­ரிக்க மக்­க­ளுடன் அவர் வியக்­கத்­தக்க தாக்­கத்தை கொண்­டுள்ளார். ஆனால் அவர் அர­சி­யலில் இருக்க வேண்­டு­மென விரும்­பு­கிறார் என நான் தமாஷ் தான் பண்ண வேண்டும்” என கூறினார்.

ஏற்­க­னவே மிஷெலிடம் அவ­ரது எதிர்­கால திட்டம் குறித்து கேட்­ட­போது அவர், “நான் ஒரு­போதும் ஹிலா­ரியின் பாதையில் செல்ல மாட்டேன்” என குறிப்­பிட்­டமை நினை­வு­கூ­றத்­தக்­கது. ஹிலாரி, தனது கணவர் கிளிண்டனின் பாதையில் அரசியலில் குதித்தமை குறிப்பிடத்தக்கது.