மர்மநபர்களால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி!!

859

kidnap

ஹைதராபாத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ஹகோனி மோனிகா என்ற 23 வயது மாணவி ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பொருளியல் படித்து வருகிறார். நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த மோனிகா அங்கு கல்லூரி விடுதியிலே தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று தான் வீட்டுக்கு வருவதாக அவருடைய தாயாரிடம் மோனிகா கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவருடைய போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது.

பல இடங்களில் தேடிவிட்டு அவருடைய விடுதியில் விசாரித்த போது அவர் சனிக்கிழமையே கிளம்பிவிட்டதாக விடுதியில் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மோனிகா காணாமல் போனது தொடர்பாக உஸ்மானியா பல்கலைக்கழக பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போன மோனிகாவை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை யாரேனும் மர்மநபர்கள் கடத்தி இருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.