வருடத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் மத்யூஸ் : டில்ஷான், மலிங்கவுக்கு தலா இரு விருதுகள்!!

470

VRA-20161202-m02-MED.indd

இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் வரு­டத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை மூன்­றா­வது தட­வை­யாக வென்­றெ­டுத்தார்.

வருடத்தின் சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் பெறுகின்றார்

சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் பிர­கா­சிக்கும் வீரர்­க­ளுக்கு விருது வழங்கி கௌர­விக்கும் மகுடம் சூட்டும் விழா­வான டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விரு­து­விழா, வோட்டர்ஸ் எஜ் மண்­ட­பத்தில் புதன் இரவு கோலா­க­ல­மாக நடை­பெற்­றது.

2015 – 2016 கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­களைக் கௌர­விக்கும் இவ்­வி­ழாவில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, பாகிஸ்­தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்ரம் ஆகியோர் முறையே பிர­தம அதி­தி­யா­கவும் சிறப்பு அதி­தி­யா­கவும் கலந்து கொண்­டனர்.

வருடத்தின் மக்கள் அபிமான கிரிக்கெட் வீரருக்கான விருதினை டயலொக் ஆசியாட்டாவின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கவுள்ள சுமித் வீரசிங்கவிடமிருந்து திலக்கரட்ண டில்ஷான் பெறுகின்றார்.

வரு­டத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை வென்­றெ­டுத்த ஏஞ்­சலோ மெத்யூஸ், டெஸ்ட் மற்றும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை போட்­டி­க­ளிலும் அதி சிறந்த சக­ல­துறை வீர­ருக்­கான இரண்டு விரு­து­க­ளையும் வென்­றெ­டுத்தார்.

வரு­டத்தின் மக்­களின் அபி­மான வீர­ராக சர்­வ­தேச கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து ஓய்வு பெற்ற திலக்­க­ரட்ன டில்ஷான் வென்­றெ­டுத்தார்.
இவ் விழாவில் திலக்­க­ரட்ன டில்­ஷானும் லசித் மாலிங்­கவும் தலா இரண்டு விரு­து­க­ளுக்கு சொந்­தக்­கா­ரர்­க­ளா­கினர்.

மக்கள் அபி­மான வீரர் விருதை விட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களில் வரு­டத்தின் அதி சிறந்த துடுப்­பாட்­டக்­காரர் விரு­தையும் டில்ஷான் வென்­றெ­டுத்தார்.

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் ஆகிய இரண்டு வகை அரங்­கு­க­ளிலும் வரு­டத்தின் அதி சிறந்த பந்­து­வீச்­சா­ள­ருக்­கான விரு­து­களை லசித் மாலிங்க வென்­றெ­டுத்தார்.

கடந்த வருடம் முன்­னே­றி­வரும் வீர­ருக்­கான டயலொக் விருதை வென்­றெ­டுத்த குசல் மெண்டிஸ், வரு­டத்தின் எதிர்­கால கிரிக்கெட் வீர­ருக்­கான விருதை வென்­றெ­டுத்தார். பாகிஸ்­தானின் கிரிக்கெட் மேதை வசிம் அக்­ர­மி­ட­மி­ருந்து இந்த விருதைப் பெறும் பாக்­கியம் குசல் மெண்­டி­ஸுக்கு கிடைத்­தமை அவ­ரது வாழ்­நாளில் மறக்க முடி­யாத ஒரு நிகழ்­வாக அமைந்­தி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

வரு­டத்தின் அதி சிறந்த டெஸ்ட் துடுப்­பாட்­டக்­கா­ர­ராக தினேஷ் சந்­தி­மாலும் வரு­டத்தின் அதி சிறந்த டெஸ்ட் பந்­து­வீச்­சா­ள­ராக ரங்­கன ஹேரத்தும் தெரி­வா­கினர்.

வரு­டத்தின் அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் துடுப்­பாட்­டக்­காரர் விருது குமார் சங்­கங்­கா­ர­வுக்கு வழங்­கப்­பட்­டது.

சர்­வ­தேச மகளிர் கிரிக்கெட்

*அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் துடுப்­பாட்­டக்­காரர்: சமரி அத்­தப்­பத்து.

*அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் பந்­து­வீச்­சா­ளினி: இனோக்கா ரண­வீர.

*அதி சிறந்த சர்­வ­தேச ஒருநாள் சக­ல­துறை வீராங்­கனை: ஷஷி­கலா சிறி­வர்­தன.

இதர விரு­துகள்

*வரு­டத்தின் அதி சிறந்த வர்­ண­னை­யாளர்: ரசல் ஆர்னல்ட்.

*வரு­டத்தின் அதி சிறந்த ஊட­க­வி­ய­லாளர்: ரெக்ஸ் க்ளமென்டைன் (தி ஐலண்ட்).

*வரு­டத்தின் அதி சிறந்த மத்­தி­யஸ்தர்: ருச்­சிர பல்­லி­ய­குரு.

மகளிர் கிரிக்கெட் அணி­யினர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவருவதால் அவர்களில் எவரும் விருது விழாவில் கலந்துகொள்ள வில்லை.

குமார் சங்கக்கார, ரசல் ஆர்னல்ட், ரெக்ஸ் க்ளமென்டைன் ஆகியோர் தொழில் நிமித்தம் விருதுவிழாவுக்கு வருகை தரமுடியாமல் போனதாக தெரியவருகின்றது. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வழங்கப்படவுள்ளன.

VRA-20161202-m02-MED.indd 3 4