முச்சக்கரவண்டி மற்றும் தனியார் பேரூந்து பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!!

519

auto

முச்சக்கரவண்டி சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் தங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு தினங்களில் தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டதாகவும் இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தேசிய சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

எனினும், ஒரு வாரத்திற்குள் தீர்வு எட்டப்படாவிடின், கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் அனைத்து நுழைவாயில்களையும் மறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தனியார் பஸ் ஊழியர்கள் தாம் முன்னெடுத்து வந்த பணிப் பகிஸ்கரிப்பை கைவிடத் தீர்மானித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து கலந்துரையாட ஜனாதிபதி இணங்கியுள்ளதையடுத்தே அவர்கள் இந்தத் முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.