தனுஷ் படத்தில் நடிக்கும் டிடி!!

545

danush-dd

இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய இடத்தில் உள்ளவர் நடிகர் தனுஷ். தற்போது இவர் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என பலரும் ஆர்வம் காட்டுகின்றார்கள். கெளதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

இந்நிலையில், தன் அப்பா கஸ்தூரி ராஜா, ராஜ்கிரணை வைத்து முதல் படத்தை இயக்கியது போல தனுஷும் அவரை வைத்து தான் இயக்கும் முதல் படத்தை வெளியிட இருக்கிறார்.

‘பவர் பாண்டி’ எனும் இந்த படத்தில் முக்கிய ரோலில் பிரபல டி.வி தொகுப்பாளர் டிடி எனும் திவ்ய தர்ஷினியும் நடிக்கிறாராம்.

ஒரு சில படங்களில் சிறு ரோலில் நடித்து விட்டு டி.வி க்கே சென்ற டிடி தற்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்.