சிறுமியைக்கொலை செய்து புதைத்த சிறுவனின் தடுப்புக் காவல் மீண்டும் நீடிப்பு!!

886

Vector illustration of a man in jail

திரு­கோ­ண­மலை சம்பூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட நல்லூர் நீலாங்­கேணி காட்­டுப்­ப­கு­தியில் குறித்த பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தில் கைதான சிறு­வனின் பாது­காப்பு இல்­லத்­த­டுப்பு மீண்டும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

6 வய­தான சிறுமி ஒருவர் கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு சிறுவர் பாது­காப்பு இல்­லத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த16 வயது சிறுவன் மீண்டும் நேற்று மூதூர் நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த சிறு­வனை எதிர்­வரும் 15 ஆம் திகதி வரை சிறுவர் பாது­காப்பு இல்­லத்தில் வைக்­கு­மாறு நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்­த­ரவு பிறப்­பித்தார்.

கடந்த செப்­டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வீட்டின் முற்­றத்தில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த சிறு­மியை காண­வில்­லை­யென பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தற்­க­மை­வாக பொலி­ஸாரும் பொது மக்­களும் சேர்ந்து தேடுதல் நடத்­திய போது சிறுமி காட்டுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தெரிந்ததே.