திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான சிறுவனின் பாதுகாப்பு இல்லத்தடுப்பு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
6 வயதான சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த16 வயது சிறுவன் மீண்டும் நேற்று மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த சிறுவனை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்குமாறு நீதிவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லையென பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கமைவாக பொலிஸாரும் பொது மக்களும் சேர்ந்து தேடுதல் நடத்திய போது சிறுமி காட்டுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தெரிந்ததே.






